கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி( Emir Sheikh Hamad bin Khalifa Al-Thani) , தனது 74-வது வயதில் காலமானார்.
இவரது மறைவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதற்கமைய, அரசு அலுவலகங்கள் மற்றும் தேசியக் கொடி பறக்கும் அனைத்து இடங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், இன்று எந்தவித அரச கேளிக்கைகளும் இடம்பெறாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியை, கட்டாரை பெரும் வளர்ச்சி மற்றும் செழுமைப் பாதையில் வழிநடத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 2024 பெப்ரவரி மாதம் கட்டார் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அவர் ஒரு சிறந்த நண்பர் என்றும் பிரதமர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.












