5,575 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை நடத்திய கூட்டு நடவடிக்கையில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படைக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று (14) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், முல்லைத்தீவைச் சேர்ந்த 43 வயது நபர் ஆவார்.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபான இருப்பும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.














