முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாணந்துறை பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான ஓர் வீட்டில் அவர் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றனர், ஆனால் அப்போது சரத் வீரவன்ச அங்கு இல்லை.
இருப்பினும், இன்று (15) அவர் கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
அதன்பின்னர் , சரத் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.












