நவகமுவவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வண்டுரம்முல்ல பகுதியில் நேற்று (16) மாலை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கத்தைக் கண்டறியவும் பொலிஸஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
















