• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

Hanushya P by Hanushya P
2026/07/21
in உலகம், பிரான்ஸ்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் இன்று (21) இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.

நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி 2026 செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக்,  இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் செட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.

மேலும், 2027 ஜனவரி முதல்,  ஏற்கனவே 15 வயதிற்குட்பட்டோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகக் கணக்குகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதேவேளை,  புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல் பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இருப்பினும் விக்கிப்பீடியா,  கல்வி இணையத்தளங்கள் மற்றும் திறந்த மூல மென்பொருள் தளங்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும்.

பிரான்ஸ் பொதுச் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 90 சதவீதத்தினர் தினமும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மனநலப் பிரச்சினைகள்,  தற்கொலை எண்ணங்கள் மற்றும் தீய பழக்கவழக்கங்களுக்கான ஆபத்தை அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் முன்னெடுக்க விரும்பும் முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறுவர்களை சமூக ஊடகங்களின் கட்டுப்பாடற்ற உலகிற்குள் அனுமதித்ததன் மூலம் அவர்களின் கவனச் சிதறலை நாம் அதிகரித்துள்ளோம் என அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியிருந்த நிலையில் தற்போது பிரான்ஸைத் தொடர்ந்து கிரீஸ்,  ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

Related

Tags: childrenEuropean UnionFrench ParliamentSocial media
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

Next Post

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

Related Posts

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!
உலகம்

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

2026-08-25
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!
அமொிக்கா

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

2026-08-25
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை
அமொிக்கா

அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

2026-08-25
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி
இங்கிலாந்து

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி

2026-08-24
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?
உலகம்

நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

2026-08-24
அமெரிக்க தடைகள் அமுலுக்கு; எண்ணெய் ஓட்டத்தை நிறுத்துவதாக ஈரான் அச்சுறுத்தல்!
அமொிக்கா

அமெரிக்க தடைகள் அமுலுக்கு; எண்ணெய் ஓட்டத்தை நிறுத்துவதாக ஈரான் அச்சுறுத்தல்!

2026-08-24
Next Post
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.