கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதன்போது விவசாயத்துறையுடன் தொடர்புடைய திணைக்களங்களினால் துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பதில் விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடை முடிந்த வயல்களை ஒரு மாத காலத்திற்கு கால்நடைகளின் வாழ்வாதாரத்துக்காக தீயிட்டு எரிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி தீ வைக்க வேண்டுமாயின் சமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைவாக தீயிட தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்












