அரசாங்கத்தினால், மட்டக்களப்பு, மாவட்டத்தில் நீதி அமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினமும் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு, வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளும் நீதியமைச்சின் சட்டத்தரணிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இந்த விசாரணை நடவடிக்கைகளையும் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தனர்.
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.
இதனடிப்படையில் வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரில் 212 முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.















