உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைக்கைதிகள் பேருந்தை தனது கைப்பேசியில் இரகசியமாக வீடியோ எடுத்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுகம நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக தனது கைப்பேசியை மறைத்து வைத்து, அப்பெண் சிறைக்கைதிகள் பேருந்தை இரகசியமாக வீடியோ எடுத்ததாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.
உடுகம பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் பேரில் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரால் குற்றம் செய்யும் நோக்கத்துடன் இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், அப்பெண்ணின் மகன்களில் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுகம பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர், ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.














