நாளை (04) முதல் தற்போது நிலவும் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வுத் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது, அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னகே இதைத் தெரிவித்தார்.
இருப்பினும், ஜப்பானுக்குக் கீழே பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரு புயல் உருவாகி வருவதாகவும், அந்தச் சூழ்நிலை காரணமாக ஆறாம் நாளுக்குப் பின்னர் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, மத்திய உயர்நிலங்களின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமன்னகே தெரிவித்தார்.














