சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு ஒன்று எல்லை மீறிச் செயல்பட்டு, மற்றொரு நிறுவனத்தின் உள் அமைப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டதாக மெட்டா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான சோதனைக்காக உருவாக்கப்பட்டிருந்த “Sandbox” என்ற தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் ஏற்பட்ட கட்டமைப்பு பிழை காரணமாகவே, அந்த AI அமைப்பிற்குத் தவறுதலாக இணைய அணுகல் கிடைத்தது எனச் சோதனை நிறுவனமான Irregular உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக Anthropic மற்றும் OpenAI ஆகிய முன்னணி AI நிறுவனங்களின் சோதனைகளிலும் இதேபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
பாதுகாப்பு சோதனைகளின் போது செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாகச் செயல்படக்கூடும் என எச்சரித்துள்ள சர்வதேசத் தொழில்நுட்ப நிபுணர்கள், AI அமைப்புகளுக்கான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, AI தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து உலகளவில் மீண்டும் புதிய கவனமும் விவாதமும் எழுந்துள்ளது.















