தென் கொரிய இராணுவத்தின் தகவலின்படி, வட கொரியா புதன்கிழமையன்று (12) கிழக்குக் கடலை நோக்கி ஏவுகணை ஒன்றைச் செலுத்தியது.
ஒரு வாரத்திற்குள் நடத்தப்பட்ட இத்தகைய இரண்டாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும்.
கிழக்குக் கடற்கரையில் உள்ள வொன்சான் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதை கூட்டுப் படைத் தளபதிகள் கண்டறிந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணை 700 கிலோமீட்டருக்கும் (435 மைல்கள்) அதிகமான தூரம் பயணித்ததாக அது மேலும் தெரிவித்தது.
எனினும், இந்த ஏவுகணை சோதனையில் எந்தவித சேதமோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் வெளியாவில்லை.
அமெரிக்காவும் தென் கொரியாவும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ‘Ulchi Freedom Shield’ எனும் வழக்கமான கூட்டு இராணுவப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், இந்த அண்மைய ஏவுகணைச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பானும் தென் கொரியாவும் இந்த ஏவுகணைச் சோதனையைக் கண்டித்துள்ளன.








