கண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவை முன்னிட்டு, கலால் திணைக்களம் நேற்று (18) முதல் அப்பகுதியில் உள்ள பல மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அவை 28 ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
கண்டி கடவத்த மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மதுபான உரிம விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நத்தரன்போத்த பிரதான சாலையில் எரிபொருள் நிலையம் வரை அமைந்துள்ள அனைத்து மதுபான உரிம விற்பனை நிலையங்களும் மூடப்படும்.














