யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பின் வீடு. திரும்பியுள்ளனர்
இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவிக்கையில்,
கண் பாதிப்புக்குள்ளாகி , போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு.தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சிகிச்சைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.













