அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டுள்ளார்.
இன்று காலை (28), சம்பந்தப்பட்ட நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















