• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

Hanushya P by Hanushya P
2026/09/06
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொ*லைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

அந்தத் தண்டனைக்கு எதிராகப் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அதனை இரத்து செய்து தண்டனை வழங்குமாறும் கோரி இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுத்து இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Criminal Investigation Department (CID)Former State MinisterHigh Court!investigationpolicePremalal Jayasekara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

175 புள்ளிகளுடன் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகர்வின்!

Related Posts

175 புள்ளிகளுடன் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகர்வின்!
இலங்கை

175 புள்ளிகளுடன் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகர்வின்!

2026-09-06
குறைவடைந்துள்ள நீர் விரயம்
இலங்கை

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்

2026-09-06
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா
இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா

2026-09-06
ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை

ஜனாதிபதி பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்று!

2026-09-06
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த  அனைத்துலக மாநாடு – நிலாந்தன்!
சிறப்புக் கட்டுரைகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த  அனைத்துலக மாநாடு – நிலாந்தன்!

2026-09-06
பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்!
இலங்கை

பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்!

2026-09-06

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

0
175 புள்ளிகளுடன் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகர்வின்!

175 புள்ளிகளுடன் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகர்வின்!

0
குறைவடைந்துள்ள நீர் விரயம்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா

0
கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.