• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/18
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், லைப் ஸ்டைல், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கார்டிஃப்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற இரண்டாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் டி:20 கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் படைத்தார்.

அத்துடன் லியாம் டாசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சவுதாம்ப்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் டி:20 போட்டியில் 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த போட்டியை நடத்தும் அணி, மேகமூட்டமான சூழலில் நடைபெற்ற அடுத்த போட்டியிலும் இலங்கைக்கு எதிராக இந்த வடிவிலான போட்டிகளில் தொடர்ந்து 14 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

கார்டிஃப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் மேகமூட்டமான சூழலில் நாணய சுழற்சியில் வென்று பந்துவீசத் தீர்மானித்த இங்கிலாந்து அணி இலங்கை அணியை 145 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.

இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 37 (21) ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 31 (31) ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் அதிகபடியாக லியாம் டாசன் மூன்று விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர், 146 ஓட்டம் என்ற இலக்கினை சேஸிங் செய்த இங்கிலாந்து,  ஆட்டத்தின் முதல் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களான அநியூரின் டொனால்ட் (21) மற்றும் பட்லர் (30) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 55-2 என மாறியது.

அதையடுத்து, அதிரடி ஆட்டக்காரரும் தலைவருமான ஹாரி ப்ரூக் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசிய போதிலும், வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் ஈஷான் மலிங்கவிடம் பிடிகொடுத்து 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் டாம் பேன்டன் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் குவித்து அணியின் நிலையைச் சீராக்கினார். 

இதன் மூலம், 47 பந்துகள் (12.1) ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து அணி மற்றொரு எளிதான வெற்றியை பதிவு செய்தது.

Image

இந்த இன்னிங்ஸில் பட்லர் 30 ஓட்டங்களை எடுத்து தனது தொழில்முறைப் பயணத்தில் 15,000 ஓட்டங்களை கடந்தார்; அவரது இந்த மைல்கல் சாதனை நம்பமுடியாதது என்று ப்ரூக் கூறினார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி டி20 போட்டி, சனிக்கிழமையன்று (19)  மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவுள்ளது.

Image

Related

Tags: CardiffEnglandJos ButtlerSri LankaT20 seriesஇங்கிலாந்துஇலங்கைகார்டிஃப்டி20 கிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

Next Post

இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!
இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!
இலங்கை

களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!

2026-11-03
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!
இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

2026-11-03
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!
அமொிக்கா

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

2026-11-03
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
இலங்கை

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

2026-11-03
Next Post
இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் அத்தியாயம்!

ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் அத்தியாயம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

0
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

0
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

0
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

2026-11-03
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-11-03
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: