• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/07
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (06) வாய்மொழியாகக் குறிப்பிட்டது.

கச்சத்தீவு தீவை இலங்கைக்கு வழங்கிய நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று சவால் விடுத்த மனுக்கள் மீதான விசாரணையின்போதே நீதிமன்றம் இந்த விடயத்தைக் கூறியது.​​

மத்திய அரசின் தலைமை சட்டத்தரணியான ஆர்.வெங்கடரமணி, இப்பிரச்சினைகள் குறித்து அரசுக்கு முழுமையாகத் தெரியும் என்றும், அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து, உயர் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்சிதேவா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் விசாரணையை 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.

1974 மற்றும் 1976-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தங்களின் விளக்கம் தொடர்பாக, நீங்கள் அந்த ஒப்பந்தம் குறித்து அவர்களிடம் (இலங்கையிடம்) பேசி வருகிறீர்களா? என்று தலைமை சட்டத்தரணியிடம் நீதிபதி குமார் வினவினார்.

இதற்குப் பதிலளித்த தலைமை சட்டத்தரணி, அரசு இதில் ஈடுபட விரும்பவில்லை. ஆரம்பத்தில் இதில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் அதைக் கைவிட்டுவிட்டது, என்று கூறினார். 

மேலும், இலங்கையுடனான தனது மிகச் சிறந்த உறவைச் சிதைத்துக்கொள்ள இந்தியா விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீனவர்கள் சர்வதேச கடல் பகுதிக்குச் செல்வது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், கடல் மாசுபாடு காரணமாக இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்டதாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டினார். 

அதேநரேம், தமிழகத்திற்கான மேலதிக அரசுத் தலைமை சட்டத்தரணி பிரசாந்தோ சந்திர சென், மீனவர்கள் நீர்நிலைகளை மாசுபடுத்தவில்லை என்று வாதிட்டு அவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார். 

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 20 மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அண்மையில் எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டிய மேலதிக அரசுத் தலைமை சட்டத்தரணி ஹரிப்ரியா, இப்பிரச்சினைக்கு மத்திய அரசு இலங்கை தரப்புடன் பேசித் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க, அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்வது அவசியம் என்று மூத்த சட்டத்தரணி பி. வில்சன் கூறினார்.

கைது நடவடிக்கைகள் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி குமார் வலியுறுத்தியதுடன், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லக்கூடாது என்பது குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related

Tags: இந்திய உயர் நீதிமன்றம்கச்சத்தீவுமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

Next Post

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

Related Posts

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

2026-10-07
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு
இலங்கை

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!
இலங்கை

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2026-10-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-07
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!
இலங்கை

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

2026-10-06
Next Post
உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவின் பிரமாண்ட விடைபெறல்

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவின் பிரமாண்ட விடைபெறல்

0
இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

0
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

0
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவின் பிரமாண்ட விடைபெறல்

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவின் பிரமாண்ட விடைபெறல்

2026-10-07
இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

2026-10-07
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2026-10-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: