அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் ஆரம்ப பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த குறித்த சிறுவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5, 8 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
அத்துடன், மேலும், ஒரு சிறுவனும் ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.

















