யேமன் நாட்டின் தற்போதையை தலைநகரான ஏடனில் அமைந்துள்ள அல்-மாஷிக் ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹூதி அமைப்பினர் யேமன் அரசப் படைகளின் கட்டளை மையத்தின் மீது மூன்று ஏவுகணைகளையும், சவூதி கூட்டணிப் படைகளின் மையத்தின் மீது இரண்டு ஏவுகணைகளையும் வீசித் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது யேமனின் பிரதமரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த போதிலும், அவர்கள் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

















