மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தேரி மேற்கு ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபர்கள் அங்கு காணப்பட்டதைக் காட்டியதன் மூலம், அவர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர்.
மும்பை காவல்துறை இந்த காட்சிகளை கோட்டா காவல்துறையினருடன் பகிர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மொத்தம் ஐந்து சுற்றுகள் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த நடிகர் காயமின்றி தப்பினார்; ஆனால், அவரது சாரதியும், மற்றும் ஓர் நபரும் காயமடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தேரி ரயில் நிலையத்திற்கு வெளியே தங்கள் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
காவல்துறை சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் மாநிலத்திற்கு வெளியிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து செயல்பட்டாலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்
தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் ஷெராஃப் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.

















