மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று மாலை 5.15 மணி அளவில் ராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ராணுவ வீரர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
















