பிரித்தானியாவில் செப்டெம்பர் மாதம் வீடுகள் வாங்குவதற்கான அடமானக் கடன் ஒப்புதல்கள், 2023 டிசெம்பர் மாதத்திற்குப் பின்னர் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளன.
வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, குடும்பங்களுக்கான பாதுகாப்பற்ற கடன்கள் ஆண்டு அடிப்படையில் 9.8 வீதம் அதிகரித்துள்ளன. இது 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிக வேகமான அதிகரிப்பாகும்.
அதிகரிக்கும் கடன் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் பிரித்தானியக் குடும்பங்களின் நிதி நிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன
















