உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவின் பங்கேற்புடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து முக்கியமாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எதிர்காலம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் ஆராயப்படவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் நீண்டகாலமாகத் தொடரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றம் ஏற்படுமா என சர்வதேச நாடுகள் எதிர்பார்த்துள்ளன.

















