வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலையில், காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸாரும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் தனித்தனியாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















