ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்றும் தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள்
ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.