மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி இதுகுறித்து மத்திய செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மாகாண சபை தேர்தலினை நடாத்தும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இதுகுறித்து பல்வேறு தரப்பினரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக மாகாண சபை தேர்தலை புதிய அல்லது பழைய முறையிலோ விரைவாக நடத்த வேண்டும் என பிரதான ஆளும் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் பழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.