இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.
புருலியாவில் பொதுக்கூட்டத்தில் தான் பேசவுள்ளதாகவும் அந்தப் பதிவில் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அசாம் ாயணம் குறித்து பதிவிட்டுள்ள மோடி, கரீம்கஞ்ச் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
அசாமில் வளர்ச்சிப் பணிகள் தொடர மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்