பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், உணவகம் ஒன்றை அச்சுறுத்திய பியகம பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.