ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்து ஆயிரத்து 224பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை மொத்தமாக எட்டாயிரத்து 956பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 239பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 28ஆயிரத்து 554பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 400பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்து 63ஆயிரத்து 714பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.