பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டதோடு 141பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 42இலட்சத்து 74ஆயிரத்து 579பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 831பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 80ஆயிரத்து 477பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 968பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 35இலட்சத்து 68ஆயிரத்து 271பேர் பூரண குணமடைந்துள்ளனர்.