கைது செய்யப்பட்டிருந்த பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்தே எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.