அமெரிக்காவில் மிகையாக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை, அண்டைய நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடாவுக்கு பகிர்ந்தளிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி மெக்ஸிகோவுக்கு 25 இலட்சம் தடுப்பூசிகளும், கனடாவுக்கு 15 இலட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளுக்கு ஈடு செய்யும் வகையில் மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவிற்கு சில மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள், ஏப்ரல் மாத இறுதியில் சுமார் 3 கோடி அளவுகள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.