பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இதுவரை ஒரு கோடியே 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் இதுவரை ஒரு கோடியே 20இலட்சத்து 51ஆயிரத்து 619பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 95ஆயிரத்து 685பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 53ஆயிரத்து 386பேர் பாதிக்கப்பட்டதோடு ஆயிரத்து 570பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 47ஆயிரத்து 939பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை ஒரு கோடியே ஐந்து இலட்சத்து ஏழாயிரத்து 995பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.