சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை இருந்தால் கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று மட்டும் ஒன்றரை இலட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகதெரிவித்த அவர், . ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சென்னையில் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கோடம்பாக்கம் ஆகிய 13 இடங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.