தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் என தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தந்தையையும் கணவனையும் மட்டுமல்ல, கண்களில் ஒன்றையும் இழந்த நிலையில் தனது மகனை இழக்கத் தயாராக இல்லை என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தனது மகன் பங்களிப்பார் என்றும், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.