ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிங்கராஜா வனப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
சிங்கராஜா வனப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையிலேயே இது தொடர்பாக ஆராயும் நோக்கில் 11 ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.