இந்தியாவில் புதிதாக 59,118 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 59,118 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரமாக அதிகரித்து காணப்படுகின்றது.
இதேவேளை நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 35 ஆயிரத்து 952 பேர், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாவர்.
இதற்கிடையில் 5 கோடியே 55 இலட்சம் பேருக்கு, நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.