பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையிலேயே அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு அவர் கோரியுள்ளார்.