மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் இரண்டு இலட்சத்து 211பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில், 22இலட்சத்து 14ஆயிரத்து 542பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 787பேர் பாதிக்கப்பட்டதோடு 584பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு 62ஆயிரத்து 206பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 798பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 52ஆயிரத்து 125பேர் பூரண குணமடைந்துள்ளனர்.