பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டதோடு 63பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 19ஆயிரத்து 128பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 445பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 44ஆயிரத்து 641பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 683பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 37இலட்சத்து 48ஆயிரத்து 042பேர் பூரண குணமடைந்துள்ளனர்.