மியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து தற்போதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.
இந்த கோர ஒடுக்குமுறை அந்நாட்டில் ஆயுதப்படை தினமான இன்று நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, இராணுவ எதிர்ப்பாளர்கள் தலையிலும் பின்புறத்திலும் சுடப்படுவார்கள் என மாநில தொலைக்காட்சி நேற்று தெரிவித்திருந்தது. எனினும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பெருந்திரளான மக்கள் யாங்கோன், மாண்டலே மற்றும் பிற நகரங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், மியன்மாரில் வெளியாகும், நவ் செய்தி போர்டல் வெளியிட்டுள்ள செய்திப்படி, நாடு முழுவதும் இன்று மட்டும் இதுவரை 91 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நூற்றுக் கணக்கானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.