பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தான் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெரும் நிலையில் அரசாங்கத்தை குறை கூற முடியாது என குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு பொலிஸ் அதிகாரியால் ஒரு கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது அமெரிக்க அரசாங்கத்தை எவரும் குறை கூறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் பயணப் பொதிக்குள் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் அரசாங்கம் இதனையே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.