தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை அண்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்ட மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன்காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
அத்துடன் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும். இயல்பை விட 2 இல் இருந்து 3 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.