மியன்மார் நாட்டில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் தென்கிழக்குப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்துவதாக குறித்த குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வயது சிறுவனும் 12 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது.
குண்டு வீச்சில் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டதாகவும் தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் காடுகளில் தஞ்சமடைவதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது.
மியன்மாரில் பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதையடுத்து, அந்நாட்டின் ஆட்சிக்கவிழ்ப்புக்கும் இராணுவத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் திங்களன்று மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் டுவே லோ டவுன்ஷிப்பில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி அழிக்கப்பட்டது.
எனினும் மாணவர்கள் தலைமறைவாக இருந்ததால், எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.