பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மதுரையில் இடம்பெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.க தமிழக தலைவர் முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அத்துடன் பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து அதிமுக – பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.