கிழக்கு தைவானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், சம்பவ இடத்தில் சில உருவம் தெரியாத முழுமையற்ற சில உடல்கள் காணப்படுவதால், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அந்நாட்டு தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர உயிரிழந்த 51 பேரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஜப்பானியர் 2 பேர், மக்காவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 146க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
தைவானில் 4 நாள் பண்டிகையில் முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை), மலைப்பாதை வழியாக 492 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் பொறியியல் பராமரிப்பு குழுக்கு சொந்தமான லொரி ஒன்றின் மீது மோதி ஹூலியன் கவுண்டியில் தடம் புரண்டது.
ரயில் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த லொரியில் அப்போது யாரும் இல்லை. அந்த லொரி சரிவில் தானாக சருக்கி ரயில் பாதையின் குறுக்கே வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.