புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மாறுபாடு அச்சம் காரணமாக, மேலும் 4 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இந்த பட்டியலில் பங்களாதேஷ், கென்யா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
குறித்த தடை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 35 நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டுக்குள் வருவதற்குத் பிரித்தானியா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.