வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
வவுனியாவில் நேற்று மாத்திரம் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வவுனியாவில் நேற்று தொற்றுறுதியான ஒருவர் பூந்தோட்டத்தில் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, பூந்தோட்டம் சந்தியிலுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இதேவேளை, முகக் கவசங்கள் அணியாமல் சென்றவர்கள், பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.