கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 120 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 94 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 4,898 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.