வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண்மணி நேற்று சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.